இலங்கை மின்சார சபை மற்றும் ஊடகங்கள் ஆகியன அண்மையில் சில ஊகங்களை வெளியிட்ட போதிலும், நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படாது, என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர், மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்குத் தேவையான நிலக்கரி பற்றி விரிவாக விவரித்ததோடு, தேவையான இருப்புக்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் உறுதியளித்துள்ளார்.
வரவிருக்கும் பருவத்திற்கான உற்பத்தி முன்னறிவிப்பின்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை முழுக் கொள்ளளவில் இயக்குவதற்கு 30 தொகுதி நிலக்கரி தேவை என விஜேசேகர விளக்கியுள்ளார்.
23 ஆவது தொகுதி நிலக்கரி கப்பலிலிருந்து தற்போது இறக்கப்பட்டு வரும் நிலையிலும், 24, 25 மற்றும் 26ஆவது நிலக்கரித் தொகுதிகளைத் தாங்கிய கப்பல்கள் புத்தளத்தில் தரித்து, தற்போது இறக்குவதற்குக் காத்திருப்பதாக காஞ்சன குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், 27, 28 மற்றும் 29 ஆவது தொகுதி நிலக்கரிக் கப்பல்கள் மே முதலாம் திகதிக்கு முன்னதாக வரவுள்ள அதே நேரத்தில், 30 ஆவது நிலக்கரித் தொகுதியைத் தாங்கிய கப்பல் வரவழைக்கப்படவுள்ளது எனவும், மே முதல் வாரத்தில் அது கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் காஞ்சன தெரிவித்திருந்தார்.
T01
