பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய வரைபு அறிக்கையின்படி உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,400 இல் இருந்து 4,714 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவரும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,092 இல் இருந்து 2,882 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று வாரங்களுக்கு மேலாக அரசியல் கட்சிகளின் அவதானிப்புகளுக்காக இந்த வரைவு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தமது முன்மொழிவுகளை ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை குழுவிற்கு அனுப்பலாம் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுமா? என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் வினவிய போது, பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வேட்புமனுக்களை இரத்து செய்ய முடியாது, என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்” எனவும் மேலும் மே மாதம் 2ஆம் திகதி இறுதி அறிக்கையை குழு கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த தேசப்பிரிய, எல்லை நிர்ணயக் குழு அறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முதல் பகுதியில் சமூகத்தில் இருந்து பல்வேறு தரப்பிலிருந்து வரும் நடைமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை தாங்கள் கையாள்கிறோம் எனவும், இரண்டாவது வகை, ஒவ்வொரு ஆணையர் கருமபீடத்திற்கும் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, கருமபீடத்தின் பெயர்கள் மற்றும் ஒரு கரும பீடத்தை உருவாக்கும் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்றும், மூன்றாவது பகுதி அந்த ஒவ்வொரு பிரிவின் வரைபடங்களைக் கையாள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
T02
