சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானச்சாலைகளும் மூடப்படும் எனக் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் விநியோகச் சங்கிலி ஒழுங்குமுறைகளைக் கண்காணிப்பதற்காக விசேட நடவடிக்கையொன்று முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனத் திணைக்களத்தின் பேச்சாளர் கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

ஏதேனும் மோசடி அல்லது முறைகேடுகள் நடந்தால் 1913 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir