எல்ல பிரதேசத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
அங்கு நிர்மாணிக்கக்கூடிய சுமார் 500 அடுக்குமாடி குடியிருப்புகள், எல்லயின் இயற்கை அழகின் அற்புதமான காட்சிக்கு மத்தியில் நிர்மாணிக்கப்படக்கூடியது, இப்பகுதிக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவும் என்றும் அமைச்சர் கலாநிதி குணவர்தன இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கான பஸ் விநியோகத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கலாநிதி குணவர்தன சென்றிருந்து, அப்பகுதியை பார்வையிட்டபோதே குறித்த இடத்தை சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்த திட்டத்திற்காக வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த இடத்தில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க முதலீட்டாளர் முன்வந்தால் அது சுற்றுலாத்தலமாக மாற வாய்ப்புள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் இந்த வீடுகளை வாங்கி தங்கள் விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் மீதமுள்ள நேரத்தில் இந்த இடத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்றும் அமைச்சர் கூறினார். இதன்படி, இந்த வீடுகளை கொள்வனவு செய்பவர்கள் அவற்றை வருமான ஆதாரமாக மாற்றி விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
T02
