கந்தானைப் பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் 42 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு ஸ்பாவுக்குவந்த அவர், இன்று அதிகாலை இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற அடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
T01
