அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் – கூட்டமைப்பு எச்சரிக்கை

சதிகாரர்களின் சதிமுயற்சிக்குப் பின்னால் தமிழர்கள் செல்வோமானால், அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் வாக்கு வங்கியானது மூன்றாம் நிலையில் இருக்கின்றது. இந்தநிலையில், பலர் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கும் பணத்துக்கும் உள்வாங்கப்பட்டு, தமிழர்களின் வாக்குகளைக் கூறுபோடும் சதிவேலைகளில் இறங்கியுள்ளனர்.

அவ்வாறானவர்களுக்கு எமது மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir