மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் மாற்ற முயன்ற இருவர் கைது!

போலிக் கடவுச்சீட்டில் இங்கிலாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரும் ஜேர்மனிய பிரஜை ஒருவரும் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றியதற்காக, சந்தேகத்திற்குரிய ஆட்கடத்தல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இலங்கையைச் சேர்ந்த ஜெனார்த்தனன் சசானந்தம் (22வயது) மற்றும் ஜேர்மன் பிரஜையான சந்தோஷ் தங்கரத்தினம் (36வயது) ஆகியோர், பாதுகாப்பு சோதனை மற்றும் குடிவரவு சோதனைகளைக் கடந்து, விமான நிலைய கழிப்பறையில் முறையே காத்மாண்டு மற்றும் லண்டனுக்கான போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டனர்.

சசானந்தத்தின் போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட்டில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த ஒரு விமான நிலைய பரிசோதனை ஊழியர், அவர்களின் திட்டத்தை முறியடித்துள்ளார்.

மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொலிசாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டதுடன், இதன் பின்னணியில் கடத்தல் கும்பல் ஏதேனும் செயல்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பிரிட்டன் பாஸ்போர்ட்டை பயணிகள் எங்கிருந்து பெற்றனர் என்பதும் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டார்கள் என்பதையும் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது, என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir