பண்டிகைக் காலத்தில் தினசரி எரிபொருள் விநியோகம் அதிகரித்துள்ளது – எரிசக்தி அமைச்சர்

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகத்தின் அளவை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 4650 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 மற்றும் 5500 மெட்ரிக் டொன் ஓட்டோ டீசல் விநியோகிக்கப்படும் என்று அவர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 7 நாட்களின் எரிபொருள் விற்பனையின் தரவு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தேசிய எரிபொருள் பாஸ்,  QR அமைப்பின் மூலம் காட்டுகிறது என்றும் அவர் டுவீட் செய்துள்ளார்.

கடந்த வாரம் 60% க்கும் குறைவாக இருந்த ஒட்டுமொத்த சதவீதம் NFP QR வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத 66 எரிபொருள் நிலையங்களை தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் 80% க்கு மேல் மேம்பட்டுள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir