சூடான் மோதலில் ஐரோப்பிய ஒன்றியத் தூதர் தாக்கப்பட்டார்!

சூடானிய இராணுவத்தினருக்கிடையிலான மோதலின்போது, சூடானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஐடன் ஓஹாரா, கார்ட்டூமில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது காயமடைந்துள்ளார்.

எனினும், ஐடன் ஓஹாரா தீவிரமான காயங்களுக்கு உள்ளாகவில்லை, என அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இராஜதந்திரிகளைப் பாதுகாப்பதற்கான கடப்பாடுகளின் மீதான மொத்த மீறல் என்று குறித்த தாக்குதலை மார்ட்டின் விவரித்துள்ளார்.

சூடானில் மூன்று நாட்கள் நடந்த மோதலில் சுமார் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐ.நா தெரிவிக்கின்றது.

குறித்த மோதலில் கார்டூம் நகரமானது, வான்வழித் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கடுமையான சிறிய ஆயுதத் தாக்குதல்களைக் கண்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir