புத்தாண்டுக்காக வழங்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இந்த வாரமும் தொடர மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் சானக்க, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று முதல் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களின் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர், அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் தொடர்வது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என சானக்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னர் எரிபொருள் பாவனையை ஆராயும் கூட்டம் இன்று இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
T01
