வரும் 26 ஆம் திகதி பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (COPA) முன் ஆஜராகுமாறு இலங்கைக் காவல்துறைத் தலைமை அழைக்கப்பட்டுள்ளதாக கோபா தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பாகவும் தற்போதைய காவல்துறையின் செயல்பாடுகளினை ஆராய்வதற்காகவுமே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் ஏப்ரல் 25 ஆம் திகதி COPAவின் முன் அழைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திணைக்கம் தொடர்பான கடந்த வருடங்கள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்வதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கோபா தலைவர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார்.
T02
