SRI என்ற சாதகமற்ற வார்த்தையினால் நாட்டுக்கு பாதகம் என விஞ்ஞான எழுத்தாளரும் வானவியலாளருமான அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் பெயர் சிலோன் என்பதிலிருந்து இலங்கை என மாறியது காரணமாகக் கடந்த சில தசாப்தங்களாக நாட்டுக்கு அது அழிவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலையிலிருந்து, அதனுடன் பெயரிடப்பட்ட திவாலான நிறுவனங்கள் வரை, SRI என்ற வார்த்தை ஒரு பேரழிவு விளைவை ஏற்படுத்தியது எனவும், இலங்கையின் கடைசி மன்னன் கூட SRI விக்கிரமராஜசிங்கன் என்றுதான் அழைக்கப்பட்டான், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் பெயருக்கு முன் SRI என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதும், தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பெயர்கள் ஆகியவை நாட்டின் திவால் நிலைக்குக் காரணமாகிவிட்டதாகவும் பெரேரா கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) அதன் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்ததன் மூலம் 1956 ஆம் ஆண்டு முதல் எமது நாடு துரதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தது.
வாகன இலக்கத் தகடுகளில் SRI என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, பின்னர் நாட்டில் சிங்கள, தமிழ்ச் சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தினார். இந்த மோதலின்போது, நாடு பெருமளவிலான உயிர் இழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைச் சந்தித்தது, என்றும் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர், பின்னர் பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், இலங்கை ரயில்வேத் திணைக்களம் (SLRD), இலங்கை மத்திய வங்கி (CBSL), மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபை (SLTB) போன்ற பல அரச நிறுவனங்கள் SRI என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகப் பெரேரா கூறினார். அவர்களின் பெயர்களில் SRI என்ற வார்த்தை இருப்பதால் அவையும் திவாலாகின எனவும் அவர் விளக்கினார்.
இலங்கை என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் எமது நாடு லங்கா, சிங்களே, தம்பபன்னி, செரண்டிப், தப்ரோபேன், சைலான், சிலோன், ஹெலதீவ, தஹம் திவயின, அல்லது லக்பிம என அழைக்கப்பட்டது. முன்னர் SRI என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை, என்றும் பெரேரா தெரிவித்தார்.
கண்டி இராச்சியத்தின் சிங்கள முடியாட்சியை ஆட்சி செய்த நான்கு மன்னர்களில் கடைசியாக இருந்த மன்னன் SRI விக்கிரமராஜசிங்கவுடன் சிங்கள வம்ச முடியாட்சியும் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், என்றும் பெரேரா கூறினார்.
பிரித்தானிய டொமினியன் அந்தஸ்தை நீக்கி, இலங்கையானது, 1972 இல் புதிய அரசியலமைப்புடன் குடியரசாக மாறிய பின்னர், இலங்கையானது தனது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியது.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவிடம் SRI என்ற பெயர் அரச தலைவருக்குத் துரதிர்ஷ்டம் என்று ஒரு ஜோதிடர் கூறியமையால், பிரேமதாஸ லங்காவின் உத்தியோகபூர்வப் பெயரை Sri Lanka என்பதில் இருந்து Shri Lanka என அரசியலமைப்பின் அதிகாரம் இன்றி மாற்றினார்.
மாற்றப்பட்ட எழுத்து வடிவம் ஒரு நினைவு நாணயத்தில் மட்டுமே உள்ளது. மே 1993 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த எழுத்து வடிவமும் மீள மாற்றப்பட்டது. ஜூன் 1992 மற்றும் டிசம்பர் 1993 க்கு இடையில் வெளியிடப்பட்ட லங்கா முத்திரைகளில் மட்டுமே SHRI என்ற எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டது, என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
T01
