கண்டி, அக்குறணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக பொலிஸ் குழுக்கள் குறித்த பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரைத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலிஸாரின் வேண்டுகோளை அடுத்துக் குறித்த பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்தும் தெரிவித்துள்ளார்.
T01
