சாலை விபத்தில் 11 வயதுச் சிறுவன் பலி!

11 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று மதியம் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுபொதவிலிருந்து முனமல்தெனிய நோக்கிச் செல்லும் பேருந்தில் இருந்து ஹெட்டிபொலப் பிரதேசத்தில் சிறுவன் இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டபோது எதிர்த்திசையில் வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாகத் கூறப்படுகின்றது.

உயிரிழந்த சிறுவன் வளவ்வத்த, அனுக்கன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir