ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்று முன்னாள் சட்டமா அதிபர் ஏஜி தப்புலவிடம் விசாரணை!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் சட்டமா அதிபரின் சில கருத்துக்கள் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகச் சுட்டிக்காட்டுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தன்னிடம் இருந்து இதுவரையில் எவ்வித வாக்குமூலமும் பெறப்படவில்லை என்ற அவரது குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக TID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir