இன்னும் சில பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!

இன்னும் சில பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்குகளை அடைவதற்கும் இது உதவும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். சுங்கத்துறையின் வருடத்திற்கான வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதல் மூன்று மாதங்களுக்கு சுங்கத்திற்கு கொடுக்கப்பட்ட வருவாய் இலக்கு 270 பில்லியன் ஆகும். ஆனால், அக்காலப்பகுதியில் கிடைத்த வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12 வீதம் குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்கள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறியிருக்கிறார். 2021 இல் 485 பொருட்களும்  2022 இல் 750 பொருட்களும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தன.

ரூபாவுக்கு எதிராக டொலரின் பெறுமதியில் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதற்கான ஒரு காரணம் எனவும் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்திருக்கிறார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir