மெக்சிகோ அருகே உலகின் இரண்டாவது மிக ஆழமான ஆழி கண்டுபிடிப்பு!

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆழியானது 900 அடி ஆழமுள்ளதெனவும், ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் குறித்த ஆழியானது அடர் நீல நிறத்தில் உள்ளது.

தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும், அதற்குள் வெளிச்சம் ஊடுருவாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இந்த ஆழியில் ஒட்சிசனின் அளவு குறைவு எனக் கூறப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply