சூடானில் உயிரியல் ஆய்வுகூடத்தைக் கைப்பற்றிய இராணுவக் குழு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வுகூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளதால், ஆய்வுகூடத்தில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காணொளி ஊடாகச் செய்தியாளர்களிடம் பேசிய சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத், ஆய்வகத்துக்குள் வல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், உயிரியல் மற்றும் ஆய்வகத்தில் உள்ள ஆபத்தான பொருட்களை போராட்டக்காரர்கள் பாதுகாப்பின்றி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆய்வகத்தில் மின் இயக்கிகளின் வசதி இல்லாததால், இரத்தக் கையிருப்புகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகூட ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply