அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைத செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

பளைப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஏ9 வீதியூடாக மாடுகளை ஏற்றிப் பயணித்த கப் வாகனத்தை, பளை பொலிசார் முகமாலைப் பகுதியில் இடை மறித்துச் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியும் உதவியாளரும் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply