வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின வாகன ஊர்வலமொன்று யாழ்ப்பாண நகரில் நடைபெற்றது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்புக் கொடிகளைக் கட்டியவாறு இந்த ஊர்வலம் இடம்பெற்றது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றிருந்தது.
