முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகாவித்தியாலயம் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று வந்த இராணுவத்தினரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாலை பாடசாலை அதிபரை அழைத்த இராணுவத்தினர் பாடசாலை வளாகத்தின் வசதிகளை பார்வையிட்டு அங்கே விடுமுறை முடித்து முகாம்களுக்கு திரும்பும் படையினரை 14 நாட்கள் தனிமை படுத்தலுக்கு உட்படுத்தி கண்காணிப்பதற்காக பாடசாலை வளாகத்தை பெற நடவடிக்கை மேற்கொள்வதை அறிந்து கிராம மக்கள் பாடசாலை வாயில் கதவை மறித்து படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி குறித்த பாடசாலை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.