இலங்கையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வெளிநாட்டு நிதி வசதியின் கீழ் இலங்கை எடுக்க வேண்டிய கொள்கை நடவடிக்கைகளில், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்க வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை நடைமுறைப்படுத்துவது முன்னணியில் உள்ளது.
இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் நிதியுதவி பெறும், வறுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அதிக வாய்ப்புகளைப் பெறுவதோடு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பும் பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
T02