கொழும்பில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் ஆவணங்களின் அங்கீகாரத்தை மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரக விவகாரப் பிரிவின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவண அங்கீகாரச் செயல்முறை தாமதமடைகின்றது.
சுமுகமான ஆவணச் சரிபார்ப்புச் செயல்முறைக்கு மிக முக்கியத்துவத்தை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
தற்போது, தூதரகப் பிரிவு மிகவும் அவசரமான ஆவணங்கள் மட்டுமே செயலாக்கப்படுகின்றதுடன் கணினி அமைப்பு பழுதுபார்க்கப்பட்டவுடன் ஏனைய ஆவணங்கள் செயலாக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மற்றத் தூதரகச் சேவைகள் எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்கின்றன.
சரிபார்ப்புச் செயல்முறை முழுமையாகச் செயற்பட்டதும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும், என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவைப்படும் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்துப் பொதுமக்கள் தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்களை பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
– தூதரக விவகாரப் பிரிவு, கொழும்பு – 0112338812
– பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் – 0212215972
– பிராந்திய அலுவலகம், திருகோணமலை – 0262223182/ 86
– பிராந்திய அலுவலகம், கண்டி – 0812384410
– பிராந்திய அலுவலகம், குருநாகல் – 0372225931
– பிராந்திய அலுவலகம், மாத்தறை – 0412226713 / 041222669
T02