நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் யூனிட் 3, திட்டமிடப்பட்ட பெரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 13 முதல் நூறு நாட்களுக்கு மூடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய அனல் மின் நிலையங்கள் மூலம் மின்வெட்டு இல்லாமல் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தற்போது நுரைச்சோலையில் இறக்கப்படும் 30 வது சரக்குத் தொகுதி மூலம் இலங்கை மின்சார சபையின் இந்தப் பருவத்திற்கான முழு நிலக்கரித் தேவையும் பூர்த்தியாகும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் ஊகித்ததைப் போல, மின் தடைகள் அல்லது மின்வெட்டுக்கள் எவையும் இருக்கமாட்டா!, என்று அவர் உறுதியளித்துள்ளார்.
T02