கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து இன்று 33,722 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், மேல் மாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நாடு முழுவதிலும் நேற்று 280 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில், டெங்கு தடுப்பு ஒன்றியத்தினால் மொத்தமாக 59 MOH பிரிவுகள் அதிக டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர் என்றும் டொக்டர் ஆரியரத்ன தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.
T01