பாலிதவை பார்க்கச்சென்ற ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பகல் நாரஹேண்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இருதய சத்திரசிகிச்சையை எதிர்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

முன்னாள் எம்.பி தெவரப்பெருமவின் உடல்நிலை தற்போது தேறிவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir