சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டம்!

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத்துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாகத் தடுக்கவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் சட்டக்கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றைக் கொண்டு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கையடக்கத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மனநலம் தொடர்பான புதிய கருத்தாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தையும் முன்வைக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் சந்ததியினரைப் பாதுகாப்பதற்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை துரிதமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply