ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு! துணைத் தூதரகம் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரசாரத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் சென்று பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இணையத்தள முகவரி –
https://www.smartmoveaustralia.gov.au

You May Also Like

About the Author: digital

Leave a Reply