தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, தாய்லாந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ஜனநாயக ஆட்சியைக் கலைத்தது.
இந்த நிலையில், இராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிராக தாய்லாந்து இளைஞர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வந்தனர். போராட்டங்களுக்கு மத்தியில், தாய்லாந்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில், இராணுவத்திற்கு ஆதரவான கட்சிக்கும், எதிர்க்கட்சிகளான போர்வர்ட், பியூதாய் கட்சிகளுக்குமிடையே பலத்த போட்டி நிலவியது.
இதில், பியூதாய் கட்சி 141 இடங்களிலும், போர்வர்ட் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
T01