வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 748 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் ஆயிரத்து 397 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 1924 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir