டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர் ” நாட்டின் சந்தையில் 75% பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் டொலரின் பெறுமதி குறையும் போது அந்த பொருட்களின் விலைகளும் நியாயமான காலத்திற்குள் குறைய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவதற்காக நிதி அமைச்சகத்தின் வர்த்தக மற்றும் கொள்கைத் துறை, நுகர்வோர் விவகார ஆணையத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறது.
கட்டுமானப் பொருட்கள், உணவு மற்றும் விவசாயத் தொழில் தொடர்பான பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை குறையவில்லை என்றால், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், பாடசாலை உபகரணங்கள் உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.