இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.
அத்தோடு, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கும் சென்று பார்வையிட்டனர்.