விமான தாமதம் காரணமாக 48 இலங்கையர்களின் வேலை பாதிப்பு!

தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லவிருந்த 48 இலங்கை ஊழியர்கள் 10 மணித்தியாலங்கள் விமானம் தாமதமானதன் காரணமாக, எதிர்பார்த்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியாளர்கள் திட்டமிட்டபடி தென்கொரியாவை சென்றடையத் தவறியமையினால் அவர்களது தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு இரவு 8.05 க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10 மணி நேரம் தாமதமானது.

விமானம் தாமதமானதால், அவர்கள் திட்டமிட்டபடி தென்கொரியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் இழந்துவிட்டார்கள் என்று யாப்பா மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தென் கொரிய மனித வள நிறுவனத்துடன் குறித்த பிரச்சினை தொடர்பில் உரையாடியதாகவும், அவர்களின் பதில் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply