மன்னார் ; பனை மரக் காட்டில் தீ பரவல்

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் நேற்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீப் பரவல் ஏற்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும், நூற்றுக்கணக்கான பனை மரங்கள் தீயில் எரிந்துள்ள நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir