சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த பொருட்கள் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் தனது நண்பருக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஃப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான FZ 547 என்ற விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளுடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் பிரபுக்கள் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 75 இலட்சம் ரூபா அபாரதம் விதித்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றுக்கு வருகைத்தந்த அவர் குறித்த பொருட்கள் தனதுடையதில்ல என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.