பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைத் துணிகள், வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து 38 இலட்சத்து 31 ஆயிரம் மீட்டர் சீருடைத்துணிகள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் 95 வீதமானவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 27000 மீட்டர் சீருடைத் துணிகள், இறுதிக்கட்டமாக காலி, களுத்துறை, சிலாபத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை சீருடைத்துணிக்கான தேவை 1 கோடியே 26 இலட்சத்து 94 ஆயிரம் மீட்டராக காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.