லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் நடத்திய ஏலமொன்றில் இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய மதிப்பில் 140 கோடி ரூவாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.
ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக 140 கோடி ரூவாவிற்கு வாள் ஏலம் போனது எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.