இலங்கையின் பிரபல மேடை நகைச்சுவையாளர் (stand-up comedian) நதாஷா எதிரிசூரிய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தமதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற மேடை நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் வைத்து அவர் புத்தம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாக சி.ஐ.டி.யினருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தனது கருத்துக்களுக்காக நதாஷா எதிரிசூரிய பின்னர் பொது மன்னிப்பைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.