பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இலங்கை பின்வாங்கியது

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து இலங்கை விலகிச்சென்றுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பாக, 2019 வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதிய ஜனாதிபதியும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்று, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதே ஆகும். மேலும் உத்தேச புதிய சட்டமூலத்தையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஜி.எஸ்.பி .சலுகையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பதே ஆகும். ஆனால் குறித்த வாக்குறுதியில் இருந்து இலங்கை பின்வாங்கியுள்ளது.

கடந்த 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு முன்னேற்றமே ஏற்பட்டது’ என குறித்த அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir