அண்மையில் எரிபொருள் விலைக் குறைப்புக்குப் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
விலைத் திருத்தம் காரணமாக பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கேள்விக் கோரல்களை வழங்கவில்லை என சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
அவர்கள் கேள்விக் கோரல்களைச் செய்யாததால், நிரப்பு நிலையங்கள் புதிய இருப்புகளைப் பெறவில்லை. எனவே தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் தட்டுப்பாடு உள்ளது. இப்போது பல வாகன வரிசைகள் நிரப்பு நிலையங்களில் காணப்படுகின்றன, என்று நாவுதுன்னா கூறினார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மனிதனால் உருவாக்கப்பட்டதே! இன்று மாலைக்குள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் நாளை மற்ற மாகாணங்களிலும் பெற்றோல் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் கூறினார்.
T03