பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் வழங்குவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோத செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக சிகரெட்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் இல்லாத புகையிலைகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறு ஆய்வு செய்யும் என்றும் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.