சீனாவின் லியோங் மாகாணத்தில் அதிவேக சூறாவளி தாக்கியதை அடுத்து, பயிர்செய்கைகளும், குடியிருப்புக் கட்டிடங்களும் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
சூறாவளி தாக்கத்தையடுத்து தீயணைப்பு வீரர்களும், மின்சாரசபையினரும், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்பு படையினரும் இணைந்து பொது மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திடீரெனத் தாக்கிய சூறாவளியை அடுத்து ஏறக்குறைய 100 குடியிருப்புக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.