சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்கே உள்ள மகியோர் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு, திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பயணித்த நால்வர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்களில் ஒருவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் முன்னாள் முகவர் எனவும், இருவர் இத்தாலிய உளவுத்துறை அதிகாரிகள் எனவும், மற்றுமொருவர், ரஷ்ய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது கடந்த மே 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் 23 பேர் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீடீரென வீசிய கடும் புயலின் காரணமானவே விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.