ஸ்ரீலங்கா அரசின் ஜனநாயக விரோத செயலே கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியையும் அவர் மீதான தாக்குதலையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக  வடக்கு மாகாண சபை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை நாம் ஸ்ரீலங்கா அரசின் ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இவற்றை தடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தமிழர் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் அரச புலனாய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தாக்குதல் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விடுக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்றைய தினம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply