தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் ரணில் ரஜபக்ஷக்கள்!

நாட்டு மக்களின் ஆணையை இழந்த தற்பேதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என ஸ்ரீலங்கா நடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.

நுவரெலியா கிராண்ட் ஹொட்டலில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில், “பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல், அரசியல் மீது நம்பிக்கையில்லை” என ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தேர்தலைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான மொட்டு கட்சி அரசாங்கமும் அஞ்சி ஓடுகின்றமை ஜனாதிபதியின் உரையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது.

நிலையான அரசு ஒன்று இருந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமாந்தர நிலைக்கு வரும்.

எனவே தேர்தல் ஒன்று மிகவும் அவசியம். தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல்” எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply