சவுதி அரேபிய அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் கொள்கலன்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்நாட்டு எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் , தினசரி 2 மில்லியன் கொள்கலன் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில், மே மாதம் முதல் குறைக்கப்பட்டது.
பின்னர், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஓபெக் கூட்டமைப்பு, சவுதி அரேபிய அமைச்சகத்துடன் ஏழு மணி நேர பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.