அமெரிக்க வான் பரப்பில் திடீரென பெரும் சத்தத்துடன் பறந்த போர் விமானத்தால் பதற்ற நிலை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, வாஷிங்டன் வான் பரப்பில் நேற்று மதியம் சந்தேகத்திற்கிடமான ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ என்ற விமானம் பறந்துள்ளது.
உடனடியாக இதை அறிந்த அதிகாரிகள் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், குறித்த போர் விமனத்தில் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீண்டும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, அந்த விமானத்தை பிடிப்பதற்காக அமெரிக்க போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ விமானம் வாஷிங்டன் வான் எல்லையிலிருந்து விலகி மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
அதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு அமெரிக்க பொலிசாரும், இராணுவ வீரர்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்திற்குள்ளன விமானத்தில் பயணித்தவர்கள் யார்? யாராவது உயிரிழந்துள்ளார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க போர் விமானங்கள், ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ விமானத்தை பிடிப்பதற்காக பறந்த போது, அந்த விமானம் அமெரிக்க போர் விமானத்தின் மீது மோதுவதற்கு வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.