அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக தாம் களமிறங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த சமயத்தில் துணை ஜனாதிபதியாக கடமையாற்றிய மைக் பென்ஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்பை எதிர்த்து களமிறங்கவுள்ளார்.
பென்ஸினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் அயோவா மாகாணத்தில் நடைபெறுவுள்ள சிறப்பு கூட்டத்தின் போது, அவரது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.