கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடு செல்லத் தடை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கஜேந்திரகுமர் பொன்னம்பலம், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் வரை அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடையுத்தரவு கோரிக்கையை கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந்த கொள்ளுப்பிட்டி பெலிஸார் கையளித்தனர்.

கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் குறித்த உத்தரவை கையளித்தனர்.

எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு கஜேந்திரகுமாரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தான் கொழும்பிற்கு பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மருதங்கேணி பெலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply