நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கு விசாரணை!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். இந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை, நெடுந்தீவில் 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 101 வயது மூதாட்டியும் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

அவர்களிடமிருந்த நகைகளுக்காகவே கொலை செய்ததாக முதலில் வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவித்த சந்தேக நபர், பின்னர் அதனை மறுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply